இரு இன்னிங்சிலும் சதமடித்து ரிஷப் பண்ட் சாதனை!

 
ரிஷப் பந்த்

 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 134 ரன்களும், 2-வது இன்னிங்சில் 118 ரன்களும் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 சதங்களை பதிவு செய்து இந்தியா அசத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

ரிஷப்

தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால், கில், கே.எல்.ராகுல், பண்ட் (2) ஆகியோர் சதம் விளாசியுள்ளனர். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 சதங்களை பதிவு செய்து இந்தியா அசத்தியுள்ளது.

இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனை 6 முறை மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் மற்றொரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணி ஒரே டெஸ்டில் 5 சதங்கள் அடித்தது 1 முறை மட்டுமே நடந்துள்ளது. 1955 இல் நடைபெற்ற புகழ்பெற்ற ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரே இன்னிங்சில் 5 சதங்கள் விளாசியது

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 134 ரன்களும், 2-வது இன்னிங்சில் 118 ரன்களும் விளாசினார். விக்கெட் கீப்பர் ஒருவர் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் காண்பது இது 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் 2001-ம் ஆண்டில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இரு இன்னிங்சிலும் (142 ரன் மற்றும் 199 ரன்) சதம் அடித்திருந்தார்.

லீட்ஸ் டெஸ்டில் ரிஷப் பண்ட் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 9 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்களான இங்கிலாந்தின் பிளின்டாப், பென் ஸ்டோக்ஸ் (தலா 9 சிக்சர்) ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது