எகிறும் எதிர்பார்ப்பு... ஜூன் 22 விஜய் பிறந்தநாளில் ‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

 
விஜய் ஜனநாயகன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இளைய தளபதி விஜய். இவர்  தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2026  ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில்  வெளியாக உள்ளது. 

'ஜனநாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.  அதனால் இது விஜய்யின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது  என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

விஜய்  ஜனநாயகன்

வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உட்பட பல நட்சத்திரப்பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்தநாளை ஒட்டி ஜூன்   22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட இருப்பதாக  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது,

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது