எகிறும் எதிர்பார்ப்பு... வரலாற்றில் முதன்முறையாக மெஸ்ஸி - ரொனால்டோ நேருக்கு நேர் மோதல்.. ரசிகர்கள் உற்சாகம்!

 
messi

உலகம் முழுவதும் அதிகளவிலான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டாக இன்றளவிலும் கால்பந்து விளையாட்டு ஒளிர்கிறது. இந்நிலையில் கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்கள் என்று கருதப்படுகிற ரொனல்வோவும், மெஸ்ஸியும் கலந்துக் கொள்ளும் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளது கால்பந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா உள்ளிட்ட 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர், அடுத்த ஆண்டு (2026) ஜூன்–ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ  நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெறும். லீக் சுற்று முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகளும் என மொத்தம் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி ‘ஜே’ பிரிவிலும், ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி ‘கே’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இரு அணிகளும் தங்களது பிரிவுகளில் முதலிடம் பிடித்து, ரவுண்ட் ஆப் 32 மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்றுகளை வெற்றிகரமாக கடந்தால், காலிறுதியில் அர்ஜென்டினா–போர்ச்சுகல் மோதல் உறுதியாகும். அப்படி நடந்தால், அது கால்பந்து வரலாற்றிலேயே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மறக்க முடியாத போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!