எகிறும் எதிர்பார்ப்பு... இன்று தவெக தேர்தல் பிரசாரக் குழு ஆலோசனைக் கூட்டம்.. பனையூரில் திரளும் முக்கிய தலைவர்கள்!
சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள்: தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ள 10 பேர் கொண்ட தேர்தல் பிரசாரக் குழுவினர் மட்டுமே இதில் பங்கேற்க உள்ளனர்.

ஆதவ் அர்ஜுனா (தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர்), முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (உயர்மட்ட நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர்) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பிரசாரக் கூட்டங்களை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்துத் திட்டமிடப்படும்.

கட்சியின் தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட மாநில அளவிலான சுற்றுப்பயணம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்தல். கட்சியின் கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளைக் கடைக்கோடித் தொண்டர்களிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்கும் முறைகள் குறித்து விவாதிக்கப்படும். சமூக வலைதளங்கள் வாயிலாக இளைஞர்களைக் கவரும் வகையிலான நவீன பிரசார உத்திகளை வகுத்தல்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
