இலவச மின்சாரத்திற்கு ஆப்பு!! விவசாய இணைப்புக்களுக்கு மீட்டர் கட்டாயம்!! அதிரடி உத்தரவு!!

 
மின்சாரம்

தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை சலுகை விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. கைத்தறிக்கு 300 யூனிட் வரையும், விசைத்தறிக்கு 1000 யூனிட் வரையும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர குடிசை வீடு, விவசாயத்திற்கு முழுவதும் இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. 

இதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இலவச மின்சாரம் என்பதால் விவசாயம், குடிசை வீடுகளுக்கு மீட்டர் பொருத்தப்படுவதில்லை. அதனால் இந்த பிரிவுகளுக்கான மானியத் தொகையை தோராயமாக மதிப்பிட்டு வாரியத்திற்கு மாநில அரசு வழங்குகிறது. மொத்தம் 23.36 லட்சம் விவசாய இணைப்புகளும் 9.45 லட்சம் குடிசை இணைப்புகளும் உள்ளன. ஒரு விவசாய இணைப்புக்கு ஆண்டுக்கு ஒரு குதிரை திறனுக்கு 3550 ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது என கூறப்படுகிறது.

மின்சாரம்

இந்த நிதியாண்டிற்கு அனைத்து விவசாய இணைப்புகளிலும் உள்ள 1.85 கோடி குதிரை திறனுக்கு தலா 3550 ரூபாய் என மொத்தம் 6787 கோடி ரூபாய் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குடிசை வீட்டிற்கு ஒரு இணைப்புக்கு மாதம் 300 ரூபாய் என 10 லட்சம் இணைப்புகளுக்கு 300 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட உள்ளது.இதில் முறைகேடு உள்ளதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து மீட்டர் பொருத்தாமல் எந்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்கக் கூடாது. ஏற்கனவே இணைப்பு வழங்கி இருந்தால் உடனே மீட்டர் பொருத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல முறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீட்டர் பொருத்தினால் இலவச மின்சாரம் ரத்தாகி விடும் என கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே முயற்சி செய்தும் விவசாயிகள் எதிர்ப்பால் இந்த நடவடிக்கையை நிறுத்திவைத்தனர். இருப்பினும் 2 லட்சம் விவசாய இணைப்புகளுக்கு மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த விவகாரத்தில் தற்போது மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மின்சாரம்

அதன்படி, ஒவ்வொரு மாதமும் இலவச மின்சாரத்தை துல்லியமாக கணக்கிட்டு அதனடிப்படையில் மின் வாரியங்களுக்கு மானியம் வழங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவால் தமிழகத்தில் இலவச மின்சாரம் பெறும் விவசாய இணைப்புகள் மற்றும் குடிசை வீடுகளுக்கு மீட்டர் பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web