நகைக்கடையில் சுவரைத் துளையிட்டு கொள்ளை... 19 வயதில் இளைஞர் நூதன கொள்ளை!

 
நகைக்கடை கொள்ளை சுவர் துளையிட்டு

அகமதாபாத்தில், ஷம்பல்வாடி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையைக் குறிவைத்து, நள்ளிரவில் சினிமா பாணியில் இந்தத் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஜனவரி 8-ம் தேதி, அகமதாபாத் ஷம்பல்வாடி பகுதியில் உள்ள நகைக்கடையின் பின்புறச் சுவரை மர்ம நபர் ஒருவர் கருவி மூலம் துளையிட்டுள்ளார். அந்த ஓட்டை வழியாகக் கடைக்குள் நுழைந்த அவர், அங்கிருந்த சுமார் ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் கடையைத் திறந்த உரிமையாளர், சுவர் துளையிடப்பட்டிருப்பதையும் நகைகள் காணாமல் போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நகை கொள்ளை

புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நகைக்கடை மற்றும் அந்த வீதியில் இருந்த மற்ற கடைகளின் சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சிகளில் பதிவான உருவத்தை வைத்து, சந்தேகத்திற்குரிய நபர்களைப் போலீசார் ரகசியமாகக் கண்காணித்தனர். அதில், 19 வயது இளைஞரான அஸ்வின் என்பவர் இக்குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.கைது மற்றும் பறிமுதல்: அஸ்வினை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள நகைகளை முழுமையாகப் பறிமுதல் செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!