ரயில் நிலையத்தில் குற்றவாளிகளை பிடிக்கும் ரோபோ... வைரல் வீடியோ!

 
ரோபோ

 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ‘ஏஎஸ்ஐ அர்ஜூன்’ என்ற ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது ரயில் நிலையத்தில் தீ மற்றும் புகையை கண்டறிந்து பயணிகளை எச்சரிக்கும் திறன் கொண்டது. ரோபோ ஒவ்வொரு நாளும் வருபவர்களின் புகைப்படங்களை எடுத்து சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டுபிடித்து, அதிகாரிகளுக்கு தகவல் வழங்கும்.

அர்ஜூன் ரோபோ செயல்பாட்டில், ரயில் நிலையத்தைச் சுற்றித்திரிந்து 2 பழைய குற்றவாளிகளை அடையாளம் கண்டது. ரயில்வே போலீசார் அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். பிடிபட்டவர்களின் மீது ஒடிசா மாநிலம் ராயகடா உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது, அவர்களின் பெயர்கள் அடப்பா சிவா மற்றும் பங்காரு என தெரிவிக்கப்பட்டது.இந்த வெற்றியுடன், ஏஎஸ்ஐ அர்ஜூன் ரோபோவின் பார்வையில் இருந்து இனி யாரும் ஓடவும், ஒளியிலும் மறைய முடியாது. பயணிகள் மற்றும் போலீசாரும் ரோபோ திறனுக்கு ஆச்சரியமடைந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!