சிஇஓவை உதைத்து தரையில் வீழ்த்திய ரோபோ… வைரல் வீடியோ!
சீனாவின் ‘இன்ஜின் ஏஐ’ நிறுவனம் உருவாக்கிய ‘டி800’ ஹியூமனாய்டு ரோபோ, தனது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியையே உதைத்து கீழே தள்ளும் வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இந்த ரோபோ குத்துச்சண்டை மற்றும் உதைக்கும் பயிற்சி செய்யும் காட்சிகள் வெளியானபோது, அவை கிராபிக்ஸ் என பலரும் விமர்சித்தனர்.
அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க, நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஜாவோ டோங்யாங் பாதுகாப்பு உடைகள் அணிந்து நேரடியாக சோதனையில் ஈடுபட்டார். அப்போது ரோபோ கொடுத்த பலமான உதையில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த காட்சி ரோபோவின் உண்மையான வலிமையை வெளிப்படுத்தியது.
சுமார் 5.6 அடி உயரம், 75 கிலோ எடையுள்ள இந்த டி800 ரோபோ, உயர்தர அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைப் போல சுறுசுறுப்பாகவும், அதே நேரத்தில் வலிமையாகவும் செயல்படும் திறன் இதற்கு உள்ளது. இந்த வீடியோ, எதிர்காலத்தில் ரோபோக்களின் சக்தி எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதைக் காட்டும் எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
