ராக் மியூஸிக் ஜாம்பவான், பாடகர் ரோபே இனியெஸ்டா காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!
ஸ்பானிஷ் ராக்கின் முடிசூடா மன்னராகக் கருதப்பட்டவரும், புகழ்பெற்ற 'எக்ஸ்ட்ரீமோடியூரோ' (Extremoduro) ராக் இசைக் குழுவின் முன்னணிப் பாடகருமான ரோபே இனியெஸ்டா (Roberto Iniesta) தனது 63 வயதில் எதிர்பாராதவிதமாக காலமானார். அவரது மரணம் ஸ்பானிய இசை உலகில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1989 ஆம் ஆண்டில் 'எக்ஸ்ட்ரீமோடியூரோ' இசைக்குழுவின் முதல் ஆல்பத்தை வெளியிட்டதில் இருந்து, ரோபே இனியெஸ்டா ஸ்பானிய ராக்கில் ஒரு தனித்துவமான இடத்தை வகித்தார்.

இவரது பாடல்களின் வரிகள் ஆரம்பத்தில் சமூக விளிம்புநிலை (Marginalization) குறித்த கருப்பொருளைக் கொண்டிருந்தாலும், காலப்போக்கில் அவை ஆழமான தத்துவார்த்த சிந்தனைகளைக் கொண்டிருந்தன. இவர் ஸ்பானிய மொழியின் சமகாலக் கவிஞர்களில் ஒருவராகப் பலரால் கருதப்படுகிறார்.
ராக் இசை ஜாம்பவான் ரோபே இனியெஸ்டாவின் மறைவு செய்தியை அவரது மேலாளர் உறுதிப்படுத்தி, "எங்கள் ரோபே இறந்துவிட்டார். நாங்கள் நிலைகுலைந்து விட்டோம்" என்று வருத்தத்துடன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு நுரையீரலில் இரத்த உறைவு (Pulmonary Embolism) காரணமாக இவர் மாட்ரிட்டில் இசை நிகழ்ச்சிகளை நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தி வரும் ரசிகர்கள், "இன்று ராக்கிற்குத் துக்க நாள். இவரது பாடல்களும் இசையும் பெரும் பாரம்பரியத்தை விட்டுச் செல்கின்றன," என்று பதிவிட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
