ரொமான்டிக் ஹிட் மேன்: திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரோகித் சர்மா!

 
ரோகித் ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோகித் சர்மா, தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் இணைந்து தங்களது 10-வது திருமண நாளைக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார். இவர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரோகித் சர்மா கிரிக்கெட்

ரோகித் சர்மாவும் ரித்திகா சஜ்தேவும் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இல்லறப் பயணத்தில் நேற்றுடன் (டிசம்பர் 13) 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தத் தம்பதிக்கு, 2018-ஆம் ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தையும், 2024-ஆம் ஆண்டு ஆஹான் என்ற ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

ரோஹித் சர்மா

நேற்று (டிசம்பர் 13) தங்களது 10-ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடிய ரோகித் - ரித்திகா தம்பதி, மகிழ்ச்சியின் அடையாளமாக அழகான கேக் ஒன்றை வெட்டியுள்ளனர். இந்தக் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படத்தை, ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு, ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!