உஷார்.. நாளை முதல் 3 நாட்கள் கனமழை வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை!

 
இன்று  9 மாவட்டங்களில் கனமழை !! கவனமா இருங்க மக்களே!!
தமிழகத்தில் நாளை ஏப்ரல் 3ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிக வெயில் காரணமாக மக்கள் வெளியில் செல்வதற்கே தயங்கி வருகிறார்கள். கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெயில் பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்கீட்டை தாண்டியது. இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை !

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் நாளை 3ந் தேதி 5 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

கனமழை

மேலும் வருகின்ற ஏப்ரல் 4, 5ம் தேதிகளில் தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை” என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?