ரொனால்டோ மெஸ்ஸியுடன் சேர்ந்து உலக சாதனை!
உலக கால்பந்து வரலாற்றில் அரிய சாதனையை நோக்கி போர்ச்சுகல் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ நகர்கிறார். ஏற்கனவே ஐந்து உலகக் கோப்பைகளில் விளையாடிய அவர், வரவிருக்கும் உலகக் கோப்பையிலும் பங்கேற்க உள்ளதால் ஆறாவது முறை களம் காணும் ஒரே வீரராக உயர உள்ளார். 2006 முதல் 2022 வரை தொடர்ந்து உலக மேடையில் மிளிர்ந்திருந்தாலும், கோப்பையை மட்டும் இன்னும் அவர் கைப்பற்றவில்லை.

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரெட் கார்டு விதிக்கப்பட்டதால் அவர் நேற்று நடைபெற்ற ஆர்மீனியா போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இருந்தாலும், போர்ச்சுகல் அணி 9–1 என்ற கோல் கணக்கில் அதிரடியாக வெற்றி பெற்று தன் சக்தியை வெளிப்படுத்தியுள்ளது. உலகக் கோப்பையின் முதல் போட்டியிலும் ரொனால்டோவின் பங்கேற்பில் தெளிவு இல்லை என்றாலும், ரசிகர்கள் அவரை மைதானத்தில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஃபிஃபா உலகக் கோப்பையில் அதிக முறை விளையாடிய வீரர்களின் வரிசையில் லியோனல் மெஸ்ஸி, லோதர் மாத்தூஸ் உள்ளிட்ட பலருடன் ரொனால்டோவும் சேர்ந்து உள்ளனர். இப்போது மெஸ்ஸியும் ரொனால்டோவும் ஆறாவது உலகக் கோப்பையில் இணைந்து புதிய சாதனை படைக்க உள்ளதால், உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
