கட்டிடம் இடிக்கும் போது மேற்கூரை சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி!
சென்னை வெட்டுவாங்கேணி பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இன்று தொழிலாளர்கள் உடைக்கும் பணி நடைபெற்றது. பணியின் போது இரும்பு சாரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. எதிர்பாராத இடிபாடில், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைய வழிந்தனர்.

சரிவு விபத்தில், வடமாநிலமான ஒடிசாவை சேர்ந்த பாபு மாலிக் மற்றும் சசிகாந்த் மாலிக் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.

கட்டிட இடிப்பு பணியின் போது ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடிபாடிற்கு காரணம் என்ன, யார் பொறுப்பு என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
