பழனி மலைக்கோவிலில் புதிய ரோப் கார் பெட்டிகள்... அந்தரத்தில் பறந்து அதிரடி சோதனை ஓட்டம்!

 
rope car rope car

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, அடிவாரத்திலிருந்து மலைக்கோவிலுக்குச் செல்ல ரோப் கார் சேவை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போதுள்ள பழைய பெட்டிகளுக்குப் பதிலாக, சுமார் இருபத்தியாறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொல்கத்தாவிலிருந்து பத்து புதிய பெட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நவீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பெட்டிகளைப் பொருத்தும் பணிகளைத் தொடர்ந்து, தற்போது அதன் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கண்டறியும் வகையில் தீவிர சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மலைக்கோவில்களில் ரோப் கார்!! தமிழக அரசு அதிரடி!!

ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 290 கிலோ எடை கொண்ட மணல் மூட்டைகள் மற்றும் கற்களை ஏற்றி, மலைக்கு மேலேயும் கீழேயும் பலமுறை இயக்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்போது பெட்டிகளின் சமநிலை மற்றும் சிக்னல் கருவிகளின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து வல்லுநர் குழுவினர் நுணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர். பழைய பெட்டிகளில் ஒரு கதவு மட்டுமே இருந்த நிலையில், தற்போதுள்ள புதிய பெட்டிகளில் இரண்டு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் நெரிசலின்றி ஏறி இறங்குவதற்கு ஏதுவாகப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ரோப் கார்

இந்தச் சோதனை ஓட்டம் முழுமையாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, உயர்மட்டக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து முறையான சான்றிதழை வழங்க உள்ளனர். அதன் பின்னரே, பக்தர்கள் இந்தப் புதிய பெட்டிகளில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது. மலைக்கோவிலின் இயற்கை அழகை ரசித்தபடியே மூன்றே நிமிடங்களில் உச்சிக்குச் செல்ல முடியும் என்பதால், இந்தப் புதிய ரோப் கார் சேவையின் தொடக்கத்தை எதிர்பார்த்து முருக பக்தர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!