விரைவில் சபரிமலையில் ரோப் கார் ... பக்தர்கள் உற்சாகம்!

 
சபரிமலை
 


 

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தற்போது பம்பையில் இருந்து டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இதன் மூலம் பக்தர்களுக்கும்,  சுற்றுச்சூழலுக்கும்,  பாதிப்பு ஏற்படுவதால் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

சபரிமலை

அதன்படி, பம்பை ஹில்டாப் பகுதியில் இருந்து சன்னிதானம் வரை 2.7 கிமீ தொலைவுக்கு இந்த ரோப் கார் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு 4.5336 ஹெக்டேர் வன நிலம் தேவைப்படும் என கூறியதும் இதற்கு வனத்துறை முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  இதைத் தொடர்ந்து சபரிமலை வனப்பகுதியில் ரோப் கார் திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் வன நிலத்திற்கு பதிலாக கொல்லம் அருகே உள்ள பகுதியில் வனத்துறைக்கு நிலம் ஒதுக்க கேரள அரசு முன்வந்தது. 

சபரிமலை

இந்த ஒப்பந்தத்திற்கு வனத்துறை சம்மதம் தெரிவித்தது. இதன்படி சமீபத்தில் வனத்துறையிடம் அரசு நிலம் ஒப்படைக்கப்பட்ட  நிலையில் இந்த ரோப் கார் திட்டத்திற்கு கேரள வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனால் ரோப் கார் சேவை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது