மசாஜ் சென்டரில் ரவுடிகள் அட்டகாசம்… கத்தி முனையில் தங்கம், செல்போன் பறிப்பு, 3 பேர் கைது!

 
masaj

சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் ரவுடிகள் அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7ம் தேதி இரவு 5 பேர் மசாஜ் சென்டருக்கு வந்துள்ளனர். இதில் ஒருவருக்கு குடிபோதையால் மசாஜ் செய்ய ஊழியர்கள் முதலில் மறுத்துள்ளனர். பின்னர் அதிக பணம் தருவதாக கூறியதால் அவருக்கும் மசாஜ் செய்துள்ளனர். மசாஜ் முடிந்த பிறகு ஏற்பட்ட தகராறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபரின் நண்பர்கள் மசாஜ் சென்டரில் பணியாற்றிய தனலட்சுமி, ஷாலினி, பிரியங்கா ஆகியோரிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் கத்தி முனையில் மிரட்டி 10 கிராம் தங்க நகைகள் மற்றும் செல்போன்களை பறித்து சென்றுள்ளனர். மேலும் மசாஜ் சென்டரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் கருவிகளையும் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ரவுடிகள் வீரமருது, ஆனந்த்குமார், ரவிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள், செல்போன்கள், கத்திகள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!