ஆர்ஆர்ஆர் பட நடிகர் காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
ராய் ஸ்டீவன்சன்

உலகம் முழுவதும்  தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி, மலையாளம் என 6 மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான இந்தப்படம் 2022 மார்ச் 25ம் தேதி வெளியானது.  ரசிர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் ரூ1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

ராய் ஸ்டீவன்சன்

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்று சாதனை படைத்தது. இதனிடையே, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் ராய் ஸ்டீவ்சன்.இவருக்கு வயது 58. இவர் அயர்லாந்து நாட்டின் லிஸ்பர்ன் நகரில் 1964 ம் ஆண்டு பிறந்தவர்.  ராய் ஸ்டீவ்சன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் மிகவும் கொடூரமான பிரிட்டிஷ் கவர்னர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.  

rip

பிரபல ஆங்கில படமான 'தோர்' படத்திலும், பிரபல வெப் தொடரான 'ரோம்'  லும் நடித்து பிரபலமானார். நடிகர் ராய் ஸ்டீவ்சன் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை மே 21 ம் தேதி  திடீரென உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. ஆர்ஆர்ஆர் திரைப்பட வில்லன் நடிகர் ஸ்டீவ்சன் உயிரிழந்த சம்பவம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இவரது திடீர் மரணத்திற்கு பிரபலங்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web