விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு... சிறப்பு மக்கள் நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடியில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடியை சேர்ந்த துரைசிங் என்பவர், தூத்துக்குடி 4ம் கேட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் மோதி படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் நஷ்டஈடு கோரி தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு சிறப்பு மக்கள் கோர்ட்டில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணைக்கு பிறகு, துரைசிங்குக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 6 ஆயிரத்து 486 நஷ்ட ஈடு தொகை வழங்க முதன்மை நீதிபதி வசந்தி உத்தரவிட்டார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!