அனுராக் காஷ்யப் முகத்தில் மை பூசுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு... ராஜஸ்தான் அமைப்பினர் சர்ச்சை!
இயக்குநர் அனுராக் காஷ்யப், பிராமணர்களை விமர்சித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட பின்பும் பிரச்சினை தொடர்கிறது. இந்நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் முகத்தில் மை பூசுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு என ராஜஸ்தானின் சாணக்ய சேனா அறிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இயங்கி வரும் சாணக்ய சேனா எனும் அமைப்பு, அனுராக் காஷ்யப், பிராமண சமூகத்துக்கு எதிராக தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்களை கண்டித்துள்ளது.

அனுராக் காஷ்யாப் தனது கருத்துக்களுக்காக பொதுவெளியில் மன்னிப்பு கேட்டிருந்த போதிலும், அவரது முகத்தில் கருப்பு மை பூசினால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று சாணக்ய சேனா அறிவித்துள்ளது. இது குறித்து சாணக்ய சேனாவின் புரவலரும் சர்வ பிராமண மகாசபையின் தேசியத் தலைவருமான பண்டிட் சுரேஷ் மிஸ்ரா, ‘காஷ்யப்பின் கருத்துக்கு சமூகத்தில் பெரும் கோபம் உள்ளது.

அவரது அறிக்கைக்கு எதிராக சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் ஒருமனதாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. அனுராக் முகத்தில் மையை பூசுபவருக்கு ரூ.1 கோடியை சாணக்ய சேனா அளிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
