துப்புக்கொடுத்தா ரூ1லட்சம்... இளம்பெண் பேருந்துக்குள் பாலியல் வன்புணர்வு... புகைப்படம் வெளியீடு!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் ஸ்வார்கேட்டில் 26 வயது நிறைந்த இளம்பெண் பிப்ரவரி 25ம் தேதி அதிகாலை பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அங்கே வந்த 36 வயது ஆண் நபர் விளக்கில்லாத பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றார். அங்கே இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பியோடினார்.
இதுகுறித்து அந்தப் பெண் தனது தோழிக்கு தகவல் அளித்ததன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், அவரது பெயர் தத்தாத்ரயா ராம்தாஸ் கடே. இவருக்கு வயது 36. தற்போது அவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து அந்த நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என புனே காவல்துறை அறிவித்துள்ளது.
அத்துடன் காவல்துறை அவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். ”குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர் மீது ஏற்கெனவே 6 வழக்குகள் உள்ளன. புனே மற்றும் அஹில்யாநகர் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை மற்றும் சங்கிலி பறிப்பு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர். ஏற்கனவே குற்றவழக்குகளில் கைதாக சிறை சென்ற அவர் , 2019ல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்” என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் மகாராஷ்டிர மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!