ஜாக்பாட்.. தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,00,000 பரிசு தொகை! அரசு அறிவிப்பு!

 
பேச்சுப் போட்டிகள்

தமிழக சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், தமிழகத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களுக்காகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. கலை மற்றும் அறிவியல், மருத்துவம், சட்டம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய பாட திட்டங்களைக் கடந்து மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

 இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுதொகை கொடுக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இனி முழு விவரங்களை பார்க்கலாம்..

போட்டியின் விதிமுறைகள்:

1. போட்டிகள் மாவட்ட அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக நடத்தப்படும்.

2. மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் கலந்துகொள்ளும் மாநில அளவிலான போட்டி இறுதியில் நடத்தப்படும்.
3. வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தனித்தனியாகப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

4. மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுத் தொகையில் விவரங்களை அறிவித்துள்ளனர்.

பேச்சுப் போட்டிகள்

போட்டிக்கான தலைப்புகள்:

தமிழ்:

1."செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே”

2. பெரியாரும் அம்பேத்கரும் கண்ட சமூக ஐனநாயகம்

3. கல்விக் கண்திறந்த கர்மவீரர் காமராசர்

4. அறிஞர் அண்ணாவின் “தமிழ்க் கனவு”

5.கலைஞர் கண்ட மாநில சுயாட்சியும், மாநில உரிமைகளும்

6.மீண்டும் அண்ணல் காந்தி அவதரிக்க வேண்டும்.

7.வரலாறு தமிழ்நாட்டில் இருந்து துவங்குகிறது!

8.ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இந்தியா!

9.மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

10.தமிழ்நாட்டின் தியாகதீபங்களால் சுடர்விட்ட இந்திய விடுதலைப்போர்!

11.இந்தியா நமது தேசம்! மனித நேயம் அதன் சுவாசம்!!

12.நேரு கண்ட மதச்சார்பற்ற இந்தியா

13.என் சமகால இளைஞர்களே..?

14.சமூகநீதி காப்போம். சரித்திரம் படைப்போம்

15.திராவிடம் சொல்லும் பண்பாட்டு நெறி

ஆங்கிலம்:

1. India of My Dreams

2. Save my Mother Earth!

3. Do we need reservation in Judiciary?

4. The Perils of jobless growth

5. Serving Humanity is my Religion

6. Independent Judiciary - The watch Dog of Democracy

7. Freedom of Expression and the civilized society

8. Women Empowerment

9. Social Media -A blessing or a curse?

10. Unity Not Uniformity

11. Freedom of Religion - A basic human Right

12. Social justice vs inequality

13. Dravidian Ethos

14. The roll of State Governments in Economic Development

15. Regional aspirations a must for National progress

பேச்சுப் போட்டிகள்

பரிசு விவரங்கள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதற் பரிசுக்கு ரூ. 20,000, இரண்டாம்  பரிசுக்கு ரூ. 10,000, மூன்றாம் பரிசுக்கு ரூ. 5000 வழங்கப்படும். மாநில அளவில் முதற் பரிசுக்கு ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசுக்கு ரூ. 50 ஆயிரம், மூன்றாம் பரிசுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் வருகின்ற 20.02.2023 ஆம் தேதிக்குள் பெயர்கள், மின்னஞ்சல், அஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் ஆகியவற்றை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி : : smcelocution@gmail.com

அஞ்சல் முகவரி : திரு.D.ரவிச்சந்திரன் இ.ஆ.ப.,

உறுப்பினர் செயலர், மாநில சிறுபான்மையினர் ஆணையம்,

முதல் தளம், கலச மஹால், புராதன் கட்டிடம், சேப்பாக்கம், சென்னை - 600005.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web