மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

 
உதவித்தொகை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 2000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயில்பவராக இருக்க வேண்டும். (பகுதி நேர ஆராய்ச்சி மாணவர்களுக்கு இது பொருந்தாது). முதுகலைப் பட்டப்படிப்பில் (Master's Degree) குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கு 50 வயதிற்குள்ளும், பெண்களுக்கு 55 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

உதவித்தொகை

குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்குத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு ஊழியர்கள் அல்லது ஏற்கனவே வேறு ஏதேனும் உதவித்தொகை பெறுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கும் வரை அல்லது அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

பாடப்பிரிவு வாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன (அறிவியல் - 40%, கலை மற்றும் வணிகம் - 20% போன்றவை). ஒரே மதிப்பெண் பெற்றிருக்கும் பட்சத்தில், வயதில் மூத்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உலகளாவிய அளவில் தரவரிசையில் (QS, NIRF, UGC) உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்குக் கூடுதல் முன்னுரிமை உண்டு.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள மாணவர்கள் https://adwphdscholarship.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, சாதி, வருமானம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளரின் பரிந்துரையுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆணையர், ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை - 600 005. கடைசி நாள்: 31.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை. உங்கள் ஆராய்ச்சி திருப்திகரமாக இல்லை என்றாலோ அல்லது தவறான தகவல்கள் வழங்கப்பட்டாலோ உதவித்தொகை நிறுத்தப்படும் என்பதைக் கவனத்தில் கொள்க.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!