65 ஆண்டுகளாக ரூ 10 கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ரத்தினம்பிள்ளை காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!

 
ரத்தினம் பிள்ளை


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை  சீனிவாசபுரத்தில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ10 கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தவர்  மருத்துவர் ரத்தினம்பிள்ளை . இவர் வயது மூப்பு மற்றும் திடீர் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார்.

ரத்தினம் பிள்ளை

எந்த சிகிச்சை என்றாலும் ரூ10 மட்டுமே  அனைத்து தரப்பு மக்களிடமும் கட்டணமாக பெற்றுக் கொண்டார்.  அவர் இன்று வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 96. தமிழ்நாட்டில் அதிக பிரசவம் பார்த்த ஆண் டாக்டர் என்ற பெருமையையும் பெற்றவர். மருத்துவ பணி தொடங்கும்போது வாங்கிய பீஸ் வெறும் ரூ.2. 1997க்கு பிறகு ரூ.5. 2007 ம் ஆண்டுக்கு பிறகு இன்று வரை ரூ.10 மட்டுமே பெற்றுக்கொண்டு சிகிச்சை பார்த்து வந்தார். இவரது மறைவு அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்தியா, சீனா போர் நடந்தபோது இந்திய அரசு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி இல்லை.   மக்கள் தங்களிடம் உள்ள பணம், நகை போன்றவற்றை அரசுக்கு கொடுத்து உதவுங்கள், 5 வருடம் கழித்து அவற்றைத் திருப்பி தந்துவிடுவதாக கூறி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  அப்போது தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 83 பவுன் தங்க நகையை மத்திய அரசிடம் கொடுத்தார். மீண்டும் மத்திய அரசு நகையை திரும்பி வழங்கியது. 

ரத்தினம் பிள்ளை
கொரோனா நேரத்தில் தனது கட்டடத்தில் இருந்த கடைகளுக்கு 3 மாத வாடகையை வியாபாரிகளிடம் வாங்கிக்கொள்ளவில்லை.  இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.10 மட்டும் கட்டணமாக பெற்றுக் கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ரத்தினம்பிள்ளை வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. 
ரத்தினம்பிள்ளையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக பா.ஜ., சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது