கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியுதவி... இந்தியன் ரயில்வே அறிவிப்பு!

உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் திரண்டனர். இதையடுத்து 13 மற்றும் 114 பிளாட்பார்ம்களில் கூட்ட நெரிசல் அதிகமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ரயிலில் ஏற பயணிகள் முண்டியடித்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில், 3 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியானார்கள். பலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!