1 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ1000/- !! முதல்வர் அதிரடி!!

 
இல்லத்தரசிகள்


தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் மகளிருக்கு மாதம் ரூ1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதனை எப்போது செயல்படுத்துவீர்கள் என மக்கள் நேரடியாக கேட்டபிறகு வெகு விரைவில் எனக் கூறியிருந்தார். கடும் நிதி நெருக்கடி காரணமாக உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. விரைவில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரில் நடப்பாண்டுக்குள் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கப்படும் என  நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நிலவி வரும்  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், மகளிர் உரிமைத்தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என அறிவித்தார்.

இல்லத்தரசிகள்
இந்த திட்டம் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள்  தினம் முதல்  மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் .இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். புரட்சியை ஏற்படுத்தும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் அறிவிக்கப்படும் எனவும்  தகவல்கள் வெளியானது.  அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் பயன் பெற வாய்ப்பில்லை, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயனடைவர்,

இல்லத்தரசிகள்

மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததன் அடிப்படையில் இன்றுமுதல்வர் சட்டப்பேரவையில் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்  தமிழகம் முழுவதும்  1 கோடி மகளிர், மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளதாக அறிவித்தார். மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது.  கொடுத்துள்ளது. இனி வரும் காலங்களிலும் தமிழகத்தில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர் என தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!