அடி தூள்...இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000! முதல்வர் துவங்கி வைப்பு! திமுகவை முந்தியது பாஜக!

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியாக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சொல்லப்பட்டது. அடுத்து வர உள்ள பட்ஜெட்டில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தமிழக மக்கள் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக சார்பில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது . இந்நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு 'முதலமைச்சர் லத்லி பெஹ்னா யோஜ்னா' என பெயரிடப்பட்டுள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் 65வது பிறந்த நாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதற்காக பிரம்மாண்ட பொதுக் கூட்ட விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் பெண் பயனாளர்களுக்கு முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், "ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு பெண்கள் முன்னேற்றத்திற்காக இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
அப்போது உடனே என் மனைவியிடம் இதை பகிர்ந்து கொண்டேன். அவர் சமூகத்தில் பெண் குழந்தைகள் பாகுபாடு அதிகரித்து வரும் நேரத்தில் இத்திட்டம் அவர்களுக்கு கைகொடுக்கும். பெண்களை வலுப்படுத்தும்" எனக் கூறிறார். உங்கள் சகோதரனாக என்னுடைய செயல்பாடு சிறப்பாக இருக்கும் என உரையாற்றியுள்ளார். இதன் மூலம் வருமான வரி கட்டாதவர்களுக்கும், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கும் குறைவான வருவாய் ஈட்டும் குடும்பத்தின் பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கான உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்திற்காக மத்தியப் பிரதேச அரசு பட்ஜெட்டில் ரூ.8,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க