ஏழுமலையானுக்கு ரூ.1.20 கோடி நன்கொடை… ஒரு ஆண்டுக்கு போதுமான அரை பிளேடுகள்!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!
 

 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த வெர்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் ஸ்ரீதர் போடுபள்ளி, ரூ.1.20 கோடி மதிப்புள்ள ‘சில்வர் மேக்ஸ்’ அரை பிளேடுகளை திருமலை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார். வேண்டுதலின்படி ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மொட்டையடிக்க, இந்த பிளேடுகள் ஒரு ஆண்டுக்கு போதுமானதாக இருக்கும். திருமலையில் உள்ள அறங்காவலர் குழு தலைவர் முகாம் அலுவலகத்தில், தலைவர் பி.ஆர்.நாயுடுவிடம் அவர் பிளேடுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பி.ஆர்.நாயுடு, கல்யாணகட்டாவில் பக்தர்களுக்கு மொட்டையடிக்க ஆண்டுதோறும் ரூ.1.16 கோடி செலவில் அரை பிளேடுகள் வாங்கப்படுவதாக தெரிவித்தார். ஒரு நாளுக்கு சுமார் 40 ஆயிரம் அரை பிளேடுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வருடத்திற்கு தேவையான முழு அளவு பிளேடுகளை நன்கொடையாக வழங்க முன்வந்த ஸ்ரீதர் போடுபள்ளியை அவர் பாராட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஸ்ரீதர் போடுபள்ளி, நுகர்வோரின் தேவையை உணர்ந்து அரை பிளேடுகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நிறுவனம் தங்களுடையதே என்றார். கல்யாணகட்டாவில் பணியாற்றும் சவரத் தொழிலாளர்களுக்கு இந்த பிளேடுகள் மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார். ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட 52 நாடுகளில் தங்கள் நிறுவன பிளேடுகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதாகவும், ‘7 ஓ கிளாக்’ பிளேடுகளும் தங்கள் நிறுவனத்திலேயே தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கல்யாணகட்டா ஏ.இ.ஓ. ராமகாந்த் உடனிருந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!