நடிகர் அபிமன்யு வீட்டில் ₹1.37 கோடி கொள்ளை: ஜன்னல் வழியாகப் புகுந்த கில்லாடி திருடன்!

 
திருட்டு

அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா பகுதியில் உள்ள நடிகரின் பங்களாவில் நடைபெற்ற இந்தத் துணிகரத் திருட்டு, மும்பை திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

திருடன் மனோஜ் மோகன் ரத்தோடு (40), பங்களாவின் குளியலறை ஜன்னல் வழியாக மிகவும் லாவகமாக உள்ளே நுழைந்துள்ளார். லாக்கரை உடைக்க நேரம் எடுக்கும் என்பதால், தங்கம், வைரம் மற்றும் ரொக்கப் பணம் இருந்த பாதுகாப்பு பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து நடிகரின் 82 வயது தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து, மும்பை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தனிப்படை அமைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் ஒரு தொடர் குற்றவாளி என்பது தெரியவந்தது: இவர் மீது மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்கனவே 14 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பிடிபட்ட கொள்ளையனிடம் இருந்து ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் திருட்டுப் பொருட்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!