தமிழகத்துக்கு ரூ.14,900 கோடி வட்டியில்லாத கடனாக வழங்கப்பட்டுள்ளது... நிர்மலா சீதாராமன் தகவல்!

 
நிர்மலா சீதாராமன்
தமிழகத்​துக்கு கடந்த 4 ஆண்​டு​களில் வட்டி இல்​லாத கடனாக ரூ.14,900 கோடி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய நிதியமைச்​சர் நிர்மலா சீதா​ராமன் தெரிவித்துள்ளார். 

சென்​னை​யில் நேற்று சென்னை சிட்​டிசன் ஃபோரம் அமைப்பு சார்​பில், மத்​திய பட்​ஜெட் குறித்த கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் நிர்​மலா சீதா​ராமன் பேசுகையில், ”மத்​திய பட்​ஜெட்​டில் தமிழகத்​துக்கு போதிய திட்​டங்​களும், நிதி​யும்
ஒதுக்​கப்பட​வில்லை என குற்​றம் சாட்​டப்​படு​கிறது. கடந்த 10 ஆண்​டு​காலத்​தில் தமிழகத்​துக்கு அதிக நிதி​யும், திட்​டங்​களும் வழங்​கப்​பட்​டுள்​ளன. ஜன்​தன் யோஜனா திட்​டத்​தின் மூலம் 1.70 கோடி வங்​கிக் கணக்​கு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றில் 58 சதவீதம் பெண்​கள் பெயரில் தொடங்​கப்​பட்​ட​வை.

நிர்மலா சீதாராமன்

பிரதம மந்​திரி அவாஸ் யோஜனா திட்​டம் மூலம் 12 லட்​சம் வீடு​களும், தூய்மை இந்​தியா திட்​டம் மூலம் 59 லட்​சம் கழிப்​பறை​களும் கட்​டப்​பட்​டுள்​ளன. ஜல்​ஜீவன் திட்​டத்​தின் கீழ் 89 லட்​சம் கிராமப்​புற வீடு​களுக்கு குடிநீர் வழங்​கப்​பட்​டுள்​ளது.

பிரதம மந்​திரி உஜ்​வாலா திட்​டத்​தின் கீழ் 41 லட்​சம் சமையல் காஸ் சிலிண்​டர்கள் வழங்​கப்​படு​கின்​றன. ஜன்​அவுஷத் யோஜனா திட்​டம் மூலம் 40 முதல் 60 சதவீதம்குறைந்த விலை​யில் மருந்​து கள்விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. ஆயுஷ்​மான் திட்​டத்​தின் கீழ் 79 லட்​சம் பேருக்​கு, ரூ.5 லட்​சம் மதிப்​பிலான மருத்​து​வக் காப்​பீடுவழங்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் 4,100 கி.மீ. தொலை​வுக்கு தேசிய நெடுஞ்​சாலைகள், 1,303 கி.மீ. தொலை​வுக்கு புதி​தாக ரயில் பாதைகள் அமைக்​கப்​பட்​டு, 2,242 கி.மீ. ரயில் பாதைகள் மின் மயமாக்​கப்​பட்​டுள்​ளன.

நிர்மலா சீதாராமன்

சேலம், நெய்​வேலி, வேலூரில் உடான் திட்​டத்​தின் கீழ் புதிய விமான நிலை​யங்​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. மாநிலங்​களே சொத்​துகளை உரு​வாக்​கும் வகை​யில், 50 வருடங்​களுக்கு வட்டி இல்​லாத கடனாக 4 ஆண்​டு​களில் ரூ14,900 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்​டம் ரூ.63,246 கோடி​யில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இதில் 60 சதவீதம் மத்​திய அரசின் பங்​கு. குஜ​ராத், தமிழகத்​தில் எலெக்ட்​ரானிக் பொருட்​களை உற்​பத்தி செய்​யும் மையங்​கள் தொடங்க ரூ.1,100 கோடி ஒதுக்​கப்பட்​டுள்​ளது” என்று நிர்மலா சீதா​ராமன் தெரி​வித்​தார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?