அதிர்ச்சி... மிர்ச்சி செந்திலிடம் ரூ15000 ஆன்லைன் மோசடி!

தமிழ் திரையுலகில் மிர்ச்சி செந்தில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடரிலும் நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு தெரிந்த பெரிய தொழிலதிபர் எண்ணில் இருந்து சமீபத்தில் குறுந்தகவல் ஒன்று வந்தது.
அதற்கு பதிலளித்த போது அவருக்கு அவசரமாக பணம் தேவை என்று மற்றொரு குறுந்தகவல் வந்தது. உடனே அவர் அனுப்பிய நம்பரை சரிபார்க்காமல் ரூ.15000 அனுப்பினேன். அதன்பிறகு, அந்த நம்பரின் பெயரை பார்த்தால், யோகேந்தர் என்று இருந்தது. சந்தேகம் அடைந்த நான் அந்த தொழிலதிபரை மொபைலில் தொடர்புகொண்டு கேட்டேன்.
அப்போது அவர் தன்னுடைய வாட்ஸ்-ஆப் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதுகுறித்து புகார் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே, யாராவது அவசரம் என பணம் கேட்டால், யோசிக்காமல் பணத்தை அனுப்பாதீர்கள். இது சுட்ட கதையல்ல, உண்மையிலே பட்ட கதை எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!