விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி... இன்று கோவை மாநாட்டில் பிஎம்-கிசான் 21வது தவணையை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

 
பிஎம் கிசான் பிஎம் கிசான்

இன்று பிரதமர் மோடி கோவை வரும் நிலையில், பிஎம்.கிசான் திட்டத்தில் இன்று ரூ.18,000 கோடி விவசாயிகளுக்கு விடுவிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு பிஎம் கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

சொந்தமாக விவசாய நிலம் கொண்டுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவியாக, 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2,000 வீதம், ஆண்டுக்கு ரூ.6,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் உள்ள பயனாளி விவசாயிகளுக்கு 20 தவணைகளாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

பிஎம் கிசான்

இந்தத் திட்டத்தின் 21வது தவணை நாளை வெளியிடப்படுகிறது. கோவை மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்தபடியே காணொலி காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான தவணைத்தொகையை வெளியிட உள்ளார். இந்த முறை தலா ரூ.2,000 வீதம் நிதி வழங்கப்படுகிறது.

கிசான்

21வது தவணையாக 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.18,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. நேரடி பணப்பரிமாற்றமாக விடுவிக்கப்படும் இந்த நிதி, விவசாயிகளை பொருளாதார ரீதியாக ஆதரிக்கப் பயன்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!