நடிகை ரோஜா நெகிழ்ச்சி... சாண்டாவாக மாறி மாற்றுத்திறனாளிக்கு ரூ2லட்சம் உதவித்தொகை.. !

 
ரோஜா

 ஆந்திரா  விஜயவாடாவில் வசித்து வரும்  மாற்றுத்திறனாளி  நாகராஜ் . இவர் சாலை ஓரத்தில் செருப்பு விற்கும் கடை வைத்துள்ளார். இவருக்கு உடல் நிலை சரியில்லாத மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.  இவருக்கு  2  கால்களுமே கிடையாது . மனைவி சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக  படுத்த படுக்கையாய் இருக்கிறார்.  அரசின் மாதாந்திர  பென்ஷன் தொகை ரூ3000 தான் இவர்களது வருமானமே.

ரோஜா

இதில் தான் 2 பெண் குழந்தைகளையும் படிக்க வைக்க படாத பாடு பட்டு வருகிறார் நாகராஜ் .  இவர்களின் அவல நிலை குறித்து அறிந்து கொண்ட நடிகை ரோஜா  அவர்களுக்கு சர்ப்ரைசாக உதவி செய்ய முடிவெடுத்தார்.  அதன்படி  சாண்டா கிளாஸ் வேடமனிந்து விஜயவாடா வாம்பே காலனியில் உள்ள நாகராஜுன் வீட்டுக்கு  சென்றார். கிறிஸ்தவரான நாகராஜ் தனது வீட்டுக்கு சாண்டா கிளாஸ் வந்ததை கண்டு நெகிழ்ச்சி அடைந்தார்.   சாண்டா கிளாஸாக வந்தது அமைச்சர் ரோஜா என்பதை தெரிந்து கொண்ட அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டார்.  நாகராஜ் குடும்பத்துடன் கொண்டு சென்ற  கேக்கை வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.  அவரின் பெண் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதோடு குழந்தைகளின் படிப்புக்காக ரூ2 லட்சம்  காசோலையையும் வழங்கினார்.  

 

ரோஜா
ரோஜா தனது வீட்டுக்கு வந்து சென்றது குறித்து ”  நானும் என் மனைவியும்  எப்போது மரணம் என்ற நிலையில் தான்  எங்கள் உடல்நிலை உள்ளது. எனக்கும்,மனைவிக்கும் கிட்னி பிரச்சனை .  இன்று மேரி மாதாவே வீட்டுக்கு வந்தது போல ரோஜா வந்து எங்களை ஆசிர்வதித்தார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  .

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web