மகளிருக்கு மாதம் ரூ.2,000... ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம் - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி வெளியீடு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இது ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக அரசு தற்போது மாதம் ரூ. 1,000 வழங்கி வரும் நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 2,000 வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தற்போது மகளிருக்கு மட்டும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் நடைமுறையில் உள்ளது. இதனை விரிவாக்கம் செய்து, அதிமுக ஆட்சியில் ஆண்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயணம் உறுதி செய்யப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் நாட்களை 125-லிருந்து 150 நாட்களாக உயர்த்துவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். திமுக அரசு நிறைவேற்றத் தவறிய 'பழைய ஓய்வூதியத் திட்டத்தை' அதிமுக மீண்டும் அமல்படுத்தும் என அரசு ஊழியர்களுக்கு முக்கிய வாக்குறுதியை அளித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
