பிசிசிஐ-க்கு ரூ.2,079 கோடி... ஐசிசி வருவாய் பகிர்வு - உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம்!

 
பிசிசி கிரிக்கெட்

2024 முதல் 2027 வரையிலான நான்கு ஆண்டு கால சுழற்சியில், ஐசிசி ஈட்டும் மொத்த நிகர வருமானத்தில் சிங்கம் போன்ற பங்கை இந்தியா பெறுகிறது. ஐசிசியின் ஆண்டு வருமானத்தில் 38.50 சதவீதப் பங்கை பிசிசிஐ பெறுகிறது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 2,079 கோடி ரூபாய் (சுமார் 231 மில்லியன் டாலர்) ஆகும். 

டெஸ்ட் விளையாடும் மற்ற முன்னணி நாடுகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த வருமானத்தை ஒன்றாகச் சேர்த்தால் கூட, அது பிசிசிஐ-யின் ஒரு வருட வருமானத்திற்கு ஈடாகாது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகப் பங்கு பெறும் நாடுகளாக இங்கிலாந்து (ECB) 6.89% (சுமார் ரூ.371 கோடி), ஆஸ்திரேலியா (CA) 6.25% (சுமார் ரூ.337 கோடி), பாகிஸ்தான் (PCB) 5.75% (சுமார் ரூ.310 கோடி) ஆகிய நாடுகள் உள்ளன. இதர 8 முழுநேர உறுப்பினர்கள் தலா 5 சதவீதத்திற்கும் குறைவான பங்கையே பெறுகின்றனர்.

ஐசிசி

இந்தியாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அதிகப் பங்கு? என்று புரிந்துக் கொள்வதற்கு முன்பாக, இந்த வருவாய் பகிர்வு நான்கு முக்கிய காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. உலக கிரிக்கெட் வருவாயில் சுமார் 70% முதல் 80% வரை இந்தியச் சந்தையில் இருந்துதான் கிடைக்கிறது. ஐசிசியின் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கும் நிறுவனங்கள் இந்தியாவை மையப்படுத்தியே பெரும் தொகையை முதலீடு செய்கின்றன.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் நீண்டகாலப் பயணம். கடந்த 16 ஆண்டுகளில் ஐசிசி தொடர்களில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடு. முழு உறுப்பினர் அந்தஸ்து: இதற்காக வழங்கப்படும் அடிப்படைப் பங்கு.

ஐசிசி கிரிக்கெட் டி20

நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போன்ற ஒரு லீக் போட்டியின் வணிக மதிப்பு மட்டுமே சுமார் ரூ.1,800 கோடி முதல் ரூ.2,200 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரதாரர்கள் 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவிடுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!