ரூ.23 கோடி ஊழல்... இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டனை கைது செய்ய அரசு தீவிரம்!

 
இலங்கை கிரிக்கெட் அர்ஜுன ரணதுங்கா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்காவை, ரூ. 23 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இலங்கை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ரணதுங்கா தற்போது வெளிநாட்டில் உள்ள நிலையில், அவர் இலங்கை வந்தவுடன் கைது செய்யப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா இலங்கை

அர்ஜுன ரணதுங்கா 2017 ஆம் ஆண்டு இலங்கையின் பெட்ரோலியத்துறை மந்திரியாகப் பதவி வகித்தார். அப்போது, அவரது சகோதரரான தமுக்கா ரணதுங்கா அரசுப் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.

அர்ஜுன ரணதுங்காவும், அவரது சகோதரரும் இணைந்து பெட்ரோல் கொள்முதலில் ரூ.23 கோடி ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் தொடர்பான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அர்ஜுன ரணதுங்காவின் சகோதரர் தமுக்கா ரணதுங்காவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இலங்கை

இந்நிலையில் இந்த ரூ.23 கோடி ஊழல் வழக்கில் அர்ஜுன ரணதுங்காவைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், முன்னாள் உலகக் கோப்பைக் கேப்டனைக் கைது செய்ய இலங்கை அரசுத் தீவிரம் காட்டி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!