₹242 கோடி நிதி ஒதுக்கீடு... ஹோலி, தீபாவளிக்கு 17.5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் - டெல்லி அரசு அதிரடி!

 
டெல்லி சிலிண்டர்

2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்தத் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் டெல்லியில் செல்லுபடியாகும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் சுமார் 17.5 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவார்கள். எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி, குழாய் வழியாக இயற்கை எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்:

ஒரு சிலிண்டரின் தற்போதைய விலையான ₹853 முழுமையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு மத்திய அரசின் ₹300 மானியம் போக, எஞ்சிய தொகையான ₹553 மாநில அரசால் வழங்கப்படும்.

கேஸ் சிலிண்டர்

ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகையின் போதும், தீபாவளி பண்டிகையின் போதும் தலா ஒரு சிலிண்டருக்கான தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக டெல்லி அரசு சுமார் ₹242 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. வரும் மார்ச் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ள ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ளவர்களின் கணக்கில் முதல் தவணைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, தனது 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இதனைச் செயல்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் மற்றும் ₹5-க்கு உணவு வழங்கும் அடல் உணவகங்களைத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது இலவச சிலிண்டர் திட்டத்தையும் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் டெல்லியில் உள்ள பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களுக்குப் பண்டிகைக் காலங்களில் பெரும் சுமையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!