ரூ.2,438 கோடி மோசடி.. !! பாஜக நிர்வாகி கைது!! கலக்கத்தில் மேலிடம்!!

 
பாஜக நிர்வாகி


தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆருத்ரா நிறுவன மோசடி. அதாவது அதிக வட்டி தருவதாக கூறி, 4 பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.பணம் முதலீடு செய்தால் வட்டியாக பெரும்  தொகை கிடைக்கும் என இந்த நிறுவனங்கள் கூறியுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேரிடம், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வட்டியாக தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டி பொதுமக்களிடம் பணம் வாங்கினர். 
அதாவது ரூ.2,438 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு பெற்று மோசடி செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகிக்கு முக்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.குறிப்பாக ஹரிஷ் என்பவர் ஹரிஷ் தரகராக செயல்பட்டு பல கோடி ரூபாய் அளவிற்கு பொதுமக்களிடம் வசூல் செய்து மோசடி செய்தது தெரியவந்தது. மோசடியில் சிக்கியுள்ள ஹரிஷை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டார். பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரிஷை பொருளதாக குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குநரான மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஹரிஷ், ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் முக்கியமானவர் என்பதால் அவரை ரகசிய இடத்தில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். ஹரீஷ் முதலீட்டாளர் களிடம் இருந்து ரூ.210 கோடி டெபாசிட் வசூல் செய்து தனது வங்கி கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்துள்ளார். இவர் தனது பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சொத்துக்களை வாங்கி  குவித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஹரிஷீன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

ஆருத்ரா


இதனிடையே, விசாரணையில் பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. பாஜக நிர்வாகி ஹரிஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வெளியான தகவலில், ஆரூத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் புகார் அளிக்க தொடங்கியதும், ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ஹரிஷ் பாதுகாப்பு வேண்டி பாஜவில் இணைந்தார். ஓரிரு நாளில் அவருக்கு பாஜக மாநில விளையாட்டுப்பிரிவு செயலாளராக பதவி வழங்கப்பட்டது. 
அந்த நேரத்தில் தேர்தல் நடந்ததால், தேர்தலுக்கான செலவுகளை ஹரிஷ் ஏற்றதாகவும் கூறப்படுகிறது. இது நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ஆதாரங்களில் இருந்து உறுதியாகி உள்ளது. மேலும், ஆருத்ரா மோசடி குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்பதற்காக, பல அரசியல் கட்சியினருக்கு ரூ.100 கோடி வரை பணத்தை ஹரிஷ் மூலம் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

போலீஸ்
மோசடி நேரத்தில் ஆருத்ராவின் மேலாண் இயக்குநர் ராஜசேகர், அவரது மனைவி உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்யாமல் இருக்க, வெளிநாட்டுக்கு தப்பி செல்ல கட்சி பதவியை பயன்படுத்தி ஏற்பாடு செய்துள்ளார். ஹரிஷ் இவ்வளவு நாள் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் கட்டுப்பாட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
ஹரிஷ் எந்தெந்த அரசியல் கட்சியனருக்கு பணம் வழங்கினார், இதுநாள் வரை எந்த தலைவர் கட்டுப்பாட்டில் பதுங்கி இருந்தார், மோசடியில் இருந்து தப்பிக்க எத்தனை கோடி செல்வு செய்தார், நேரடியாக பணம் வாங்கிய அரசியல் கட்சியினர் யார், யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பல மாதங்கள் தலைமறைவாக இருந்த ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ஹரிஷ் கைது செய்யப்பட்டதால் அவரிடம் பணம் வாங்கிய அரசியல் கட்சியினர் தற்போது கலக்கமடைந்துள்ளனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web