ஒரே நாளில் ரூ.25 லட்சம்... இளைஞர் போனில் கொட்டிக் கிடந்த வீடியோக்கள்!

 
மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பல லட்சம் ரூபாயை மோசடி செய்த கும்பலிடம் மக்கள் ஏமாறுவது தொடர்கிறது. அந்த வகையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் ஒருவரிடம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மற்றும் நகைகளை மோசடி செய்த நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையின் போது, அவரது செல்போனில் இருந்து பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் மீட்கப்பட்டிருப்பது காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் கீழூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பட்டதாரிப் பெண், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், கடந்த சில வருடங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். பெண்ணின் தந்தைக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த பிரபாகரன் (37) என்பவர் அறிமுகமானார். பிரபாகரன், தான் ரயில்வேயில் வேலை செய்து வருவதாகவும், உயர் அதிகாரிகள் பலரைத் தெரியும் என்றும் கூறி, "ரூ. 25 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருகிறேன்" என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

கைது

பிரபாகரனின் பேச்சை நம்பிய பெண்ணின் தந்தை, மகளுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், பிரபாகரனின் வங்கிக் கணக்குக்கு பல தவணைகளாக ரூ. 25 லட்சம் அனுப்பியுள்ளார். மீண்டும் பணம் தேவை என்று பிரபாகரன் கேட்டதால், பெண்ணின் தந்தை 5 பவுன் நகையும் கொடுத்துள்ளார். இவ்வாறு பணம் மற்றும் நகை கொடுத்து ஓராண்டு கடந்த பின்னரும் பிரபாகரன் வேலை வாங்கி கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்ணின் தந்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலிடம் புகார் கொடுத்தார்.

காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஆரவாய்மொழி போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், அரக்கோணத்தில் பதுங்கியிருந்த பிரபாகரனைக் கைது செய்து ஆரல்வாய்மொழிக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

காவலர்கள் இருவர் உல்லாசம்

பெண்ணின் சகோதரர் அரக்கோணம் பகுதியில் வழிதெரியாமல் சுற்றித் திரிந்தபோது, பிரபாகரன் அவரை மீட்டு வந்து தந்தையிடம் ஒப்படைத்ததன் மூலம்தான் இவர்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. போலீசார் பிரபாகரனின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பல இளம் பெண்களை வரவழைத்து ஏமாற்றி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாகப் பிரபாகரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயில்வேயில் வேலை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!