அமைச்சர்களின் டீ செலவுக்கு ரூ.28 லட்சமா? பாஜக ஆவேசம்!

 
திரிபுரா தேர்தல்: எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்த பாஜக!

புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளில் அமைச்சர்களின் டீ செலவுக்கு மட்டுமே ரூ.28 லட்சம் செலவிட்டிருப்பதாக தெரிவித்துள்ள பாஜக, ஊழல் மலிந்த என்.ஆர். காங்கிரஸ் அரசை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு உள்ள நிலையில், என்.ஆர். காங்கிரசை கண்டித்து முன்னாள் மாநில பாஜக தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரியில் 4 ஆண்டுகளில் அமைச்சர்களின் டீ செலவு ரூ.28 லட்சம், பூங்கொத்து செலவு ரூ.41 லட்சம், காருக்கு போடப்படும் டீசல் மாதத்திற்கு ரூ.80 ஆயிரம் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகி உள்ளது. இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி

ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசு பலவகைகளில் மக்களின் வரி பணத்தை விரயம் செய்து வருகிறது. பல பகுதிகளில் பள்ளி கட்டிடங்கள் கட்ட பணம் இல்லை. கழிப்பட வசதி போதுமானதாக இல்லை. பொது மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு இல்லை.

ஆனால், அமைச்சர்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் டீசல் போட்டுள்ளனர். ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு உள்ள புதுச்சேரியில் 80 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் போட்டால், பெரிய மாநிலத்தில் இவர்கள் ஆட்சி செய்தால் மாதம் ஒன்றுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு டீசல் போடுவார்களா? முந்தைய காங்கிரஸ் அரசு இதேபோல் பல்வேறு வகைகளில் மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியது. அதே தவறை காங்கிரஸ் சிந்தனை கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் அரசும் செய்து வருகிறது.

காமராஜர் ஆட்சி என்ற பெயரில் மக்கள் பணத்தை விரயம் செய்யக்கூடிய அரசாக புதுச்சேரி அரசு உள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அனைத்து துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. பல்வேறு துறைகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற்றால் இந்த அரசு எவ்வளவு முறைகேடு செய்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகும்.

அரசு மருத்துவமனையில் இறக்கும் ஏழை நோயாளிகளின் உடல்களை கொண்டு செல்ல போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லை. ரூ.5,000 செலவு செய்து தனியார் ஆம்புலன்ஸை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

தேர்வெழுத தடுப்பூசி கட்டாயம் ! புதுச்சேரி அரசு அதிரடி!

மக்கள் இவர்கள் அனைவரையும் இந்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நேர்மையானவர்களையே தேர்வு செய்ய வேண்டும். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த காங்கிரஸ் வழியில் வந்த என்.ஆர்.காங்கிரஸ், அரசை நடத்தும் வரை மாற்றம் வராது.

புதுச்சேரி மக்கள் மீது பல்வேறு வரிகளை சுமத்திய கடந்த காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்பியதுபோல, தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ் அரசையும் ஒட்டு மொத்தமாக வீட்டு அனுப்ப வேண்டும். இலவசத்தை கொடுத்து ஊழலை மறைக்கலாம் என்று நினைத்தால் மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். அதற்கு உதாரணம் டெல்லி தேர்தல். இந்த தேர்தல் மதுபான தொழிற்சாலைகளை நிறுவிய ஊழல்வாதிகளை அடையாளம் காட்டும் தேர்தலாக அமையும்.

புதுச்சேரியில் ரூ. 40 லட்சத்துக்கு பூங்கொத்து வாங்கும் அளவுக்கு எத்தனை விஐபிகள் வந்துவிட்டார்கள்? அரசாங்கம் காதில் பூ சுற்றுகிறது. இதுகுறித்து மக்களிடம் இந்த அரசு விளக்க வேண்டும். இந்தியாவில் இதுபோன்ற கொள்ளை எங்கும் நடக்கவில்லை. ஏழை மக்களுடைய வரிப் பணத்தை, வயிற்றில் அடிக்கக்கூடிய அரசு தேவையா என்பதை ஒவ்வொரு வாக்காளர்களும் முடிவு பண்ண வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web