பட்டாசு வெடிவிபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு ரூ3 லட்சம் நிவாரணத் தொகை!! முதல்வர் அறிவிப்பு!!

 
முதல்வர் ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர்  , சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் அனுமதியின்றி பல பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சுற்று வட்டார கிராமங்களில் வசிப்பவர்கள் மூலமே இந்த ஆலைகள் நடத்தப்பட்டு அந்த ஊரை சேர்ந்தவர்களே பணிபுரிந்து வருகின்றனர். அனுமதியின்றி இருப்பதால் சரியான முறையில் கட்டுப்பாட்டுநெறிமுறைகள் கடைப்பிடிக்கப் படுவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்களும், அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடுகின்றன. 

ச்

 சிவகாசி பள்ளப்பட்டியில் வசித்து வருபவ  கடற்கரை . இவர்  ஊராம்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இவரது பட்டாசு ஆலையில் ஊராம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  போல் இன்று காலை தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், திடீரென உராய்வு காரணமாக பட்டாசு வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ்

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

வெடி விபத்து குறித்து  காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்தில் 2  பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ3லட்சம் நிவாரணத் தொகையை முதல்வர் அறிவித்துள்ளார்.படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web