தனியார் நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருட்டு... இளைஞர் கைது!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணத்தை திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி-சாத்தூர் பிரதான சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு நிறுவனம் நடத்தி வருபவர் ரங்கராஜ். இவர், கடந்த 6ம் தேதி நிறுவனத்தைப் பூட்டிவிட்டு, கழுகுமலை அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்கு பணியாளர்களுடன் சென்றார்.

நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக ரங்கராஜூக்கு மறுநாள் தகவல் கிடைத்தது. அவர் வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.3 லட்சத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சுரத் சிங் மகன் ஜெக் நாராயணசிங் (20) என்பவர் இத்திருட்டில் ஈடுபட்டதாகத் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
