அனைத்து ரேஷன் அட்டை தாரருக்கும் சிலிண்டருக்கு ரூ300 மானியம் ... அதிரடி உத்தரவு!!

 
சமையல் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தமிழகத்தின் அண்டை மாநிலமாம் புதுச்சேரியில் மார்ச் மாதம் நடைபெற்ற  சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ300 சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் பெண்குழந்தைகளுக்கு ரூ50000வைப்பு தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதுதவிர குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 மானியம் திட்டம்  13000 பேருக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் சுமார் ரூ70000 இல்லத்தரசிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50000   வைப்புத்தொகை செலுத்தும் திட்டத்திற்கான அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் பெயரில் மகளிர் மேம்பாட்டு துறை இதனை செயல்படுத்த உள்ளது  

புதுச்சேரி

இத்திட்டத்தின்படி குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலைய கணக்கில் ரூ. 50000  செலுத்தப்படுகிறது. 21 ஆண்டுகள் கழித்து இந்த பணம் கிடைக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சிலிண்டர் மானியத்திற்கு அரசாணை வெளியாகியுள்ளது. இதில் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் மானியமாக ரூ.300ம், மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.150 மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு சிலிண்டர் வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு இந்த தொகை வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இல்லத்தரசிகள்


பட்ஜெட்டில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.300 சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், மஞ்சள் கார்டுகளுக்கு தொகை பாதியாக ரூ.150 என குறைக்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகை கௌரவ ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிடையாது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் மானிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.புதுச்சேரியை பொறுத்தவரை  மொத்தம் உள்ள 20 கேஸ் ஏஜென்சிகளில் 3,00,323 இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. அதன்படி காரைக்காலில் 4 ஏஜென்சிகளில் 51,957 இணைப்புகளும்  மாகியில்  உள்ள ஒரே ஒரு  ஏஜென்சியில்  9,415 இணைப்புகளும், ஏனாமில் 3 ஏஜென்சிகளில் 17,066 இணைப்புகளும் என மொத்தமாக 3,78,761 இணைப்புகள் புதுச்சேரி முழுவதும் உள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web