ரேஷனில் பொங்கல் தொகுப்புடன் ₹3,000 ரொக்கப் பணம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கலுக்குப் பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் சேர்த்து ₹3,000 ரொக்கப் பணம் வழங்க அதிரடி முடிவு எடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு இந்தப் பரிசுத் தொகை கிடைக்கும். ₹3,000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே ₹248 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 8-ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பார் எனத் தெரிகிறது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ரேஷன் கடைகள் மூலம் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 400 கார்டுதாரர்களுக்கு வீதம் பரிசு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படாதது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது தேர்தல் நெருங்குவதாலும், மக்கள் கோரிக்கையை ஏற்றும் இந்த ஆண்டு ரொக்கப் பணத்தை ₹3,000-ஆக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே, அதாவது ஜனவரி 14ம் தேதிக்குள் அனைத்துத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்தப் பணம் மற்றும் பரிசுத் தொகுப்பை வழங்கி முடிக்கத் தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உங்களுக்கான டோக்கன் உங்கள் வீட்டிற்கே தேடி வரும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைக்குச் சென்று பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
