பொங்கலுக்கு ரூ.3,000... போனஸாக ரூ.10,000... திமுக - பாஜக இடையே பலப்பரீட்சை... களைக்கட்டும் தேர்தல் திருவிழா!

 
பொங்கல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் 'கரன்சி' திட்டங்களை அள்ளிவீசப் பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. ஏற்கனவே 17 லட்சம் பெண்களுக்கு விடுபட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்கித் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ள திமுக அரசு, அடுத்த கட்டமாகத் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா 3,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. நிலவரத்தைப் பொறுத்து இந்தத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்களை மையப்படுத்திய இந்தத் திட்டங்கள் மூலம் அவர்களின் முழுமையான ஆதரவைப் பெற்று விடலாம் என ஆளுங்கட்சி கணக்குப் போடுகிறது.

மகளிர் உரிமைத் தொகை

மறுபுறம், மத்தியில் ஆளும் பாஜக-வும் தமிழக தேர்தலை முன்னிட்டுப் பெரும் வியூகங்களை வகுத்து வருகிறது. வழக்கமாக டெல்லியில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி, இந்த ஆண்டு தமிழகத்திற்கே நேரில் வந்து மக்களுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாட முடிவெடுத்துள்ளார். பாரதியார், திருவள்ளுவர் எனத் தமிழ் அடையாளங்களைத் தொடர்ந்து பேசி வரும் பிரதமர், இந்த வருகையின் மூலம் தமிழர்களுடன் உணர்வுபூர்வமாக நெருக்கமடையத் திட்டமிட்டுள்ளார். பீகார் தேர்தலில் சுமார் 75 லட்சம் பெண்களுக்குச் சுயதொழில் தொடங்கத் தலா 10,000 ரூபாய் வழங்கப்பட்ட திட்டம் ஆளும் கூட்டணிக்குக் கைகொடுத்ததைப் போல, தமிழகத்திலும் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு தலா 10,000 ரூபாய் போனஸ்" என்பது போன்ற அதிரடி அறிவிப்பை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை

தேர்தல் நெருங்க நெருங்க திமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு தரப்பிலிருந்தும் இன்னும் பல கவர்ச்சிகரமான மற்றும் 'இனிப்பான' அறிவிப்புகள் வெளியாக உள்ளன. குறிப்பாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் இதுவரை இல்லாத அளவிலான சலுகைகளைத் திணிக்கத் தயாராகி வருகிறது. ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் இப்படிப் பணப் பலத்தோடும், கவர்ச்சித் திட்டங்களோடும் களமிறங்கும் நிலையில், அரசியலுக்குப் புதியவரான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இவர்களுக்கு இணையாக என்ன மாதிரியான அதிரடி அறிவிப்புகளை வெளியிடப்போகிறார் என்பதுதான் தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மொத்தத்தில் 2026 தேர்தல் களம் கரன்சி மழையில் நனையப் போவது மட்டும் உறுதி.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!