தமிழகத்தில் ரூ.35,000 கோடி முதலீடு... முகேஷ் அம்பானி பெருமிதம்!

 
முகேஷ் அம்பானி

தமிழகத்தில் ரூ.35,000 கோடி ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் முதலீடு செய்திருப்பதாகவும், தமிழகம் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக இருப்பதாகவும், முகேஷ் அம்பானி, நேற்று காணொலி காட்சி மூலமாக பெருமிதத்துடன் பேசினார்.

முன்னதாக நேற்று சென்னையில் நடைப்பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் முதலீடு செய்யவும், புதிய நிறுவனங்கள் தொடங்கவும், நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், முதலீடுகளை அதிகரிக்கவும் பல்வேறு நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

முதலீட்டாளர்கள் மாநாடு ஸ்டாலின்

இந்த மாநாட்டில், தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று காணொளி காட்சி மூலமாக முதலீட்டாளர்களிடையே பேசிய ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தன் குழுமத்தின் ஜியோ நிறுவனம் தமிழகத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக பெருமிதத்துடன் கூறினார். 

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. 

அம்பானி

ஜியோ நிறுவனம் தமிழகத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில்  அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web