வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
Jun 15, 2025, 17:10 IST

சிதம்பரம் மாவட்டத்தில் இன்று காலை நாடு வெடி தயாரிப்பு கூடத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.
இது குறித்த செய்திக்குறிப்பில், “வெடி விபத்தில் லதாகுமாரி என்பவர் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பெரியகுமட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டு பெண் ஊழியர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!