கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் பணம்.. வசமாக சிக்கிக் கொண்ட பாஜக எம்.எல்.ஏ மகன்! அரசியலில் பரபரப்பு!

 
மாடால் விருபாக்ஷப்பா

கர்நாடகா அரசு லஞ்சத்தில் மூழ்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடிவருகின்றன. குறிப்பாக பே சிஎம் என்ற வாசகத்துடன் அரசுக்கு எதிராக சாடி வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏ. மகன் லஞ்ச பணத்துடன் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர், பெங்களூருவில் பொதுப்பணித்துறையில் முக்கிய கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்தார். கர்நாடக அரசு பணியாளர்(கே.ஏ.எஸ்.) தேர்வில் வெற்றி பெற்று பிரசாந்த் அரசு பணியில் சேர்ந்திருந்தார். 

மாடால் விருபாக்ஷப்பா

ரூபாய் 40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்.எல்.ஏ. மகன் பிரசாந்த் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  லோக்ஆயுக்தா தரப்பு ஆதாரங்களின்படி, பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் (BWSSB) தலைமை கணக்கு அதிகாரியான பிரசாந்த் குமார், அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் (KSDL) என்ற பிராண்டு உருவாக்கும் மைசூர் சாண்டல் சோப் அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்.

பிரசாந்த் குமார் கைது செய்யப்பட்ட நிலையில் கே.எஸ்.டி.எல் அலுவலகத்தில் இருந்து குறைந்தது மூன்று பைகள் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 2008 பேட்ச் கர்நாடக அரசு அதிகாரியான பிரசாந்த் குமார், சோப்பு மற்றும் இதர பொருட்கள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்க ஒப்பந்தம் செய்வதற்காக ஒப்பந்தக்காரரிடமிருந்து லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார்.முன்னதாக, கர்நாடக சோப்ஸ் மற்றும் டிடர்ஜென்ட் துறைக்கு ரசாயன பொருட்கள் வாங்குவது தொடர்பாக டெண்டர் வழங்க ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஒப்பந்ததாரர்  லோக் ஆயுக்தாவை அணுகியுள்ளார். பின்னர் அவரை ஒரு பொறி வைத்துப் பிடிக்க அதிகாரிகள் திட்டம் தீட்டப்பட்டது.


 

இதையடுத்து, கிரெசென்ட் ரோட்டில் உள்ள தன்னுடைய தந்தைக்கு சொந்தமான அலுவலகத்தில் வைத்து ரூ.40 லட்சத்தை பெற்றுக் கொள்வதாக பிரசாந்த் கூறியதாக தெரிகிறது. இதற்கு ஒப்பந்ததாரரும் சம்மதம் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்று லஞ்சம் கொடுக்கும்போது, அதிரடியாக புகுந்த அதிகாரிகள் 2 பைகளில் ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 மதிப்புடைய ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது கண்டுபிடித்தனர். இதனால் லோக் அயுக்தா போலீசாரிடம் கையும், களவுமாக அதிகாரி பிரசாந்த் சிக்கி இருந்தார். 2 பைகளிலும் ஒட்டு மொத்தமாக ரூ.40 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.40 லட்சத்தையும் லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தார்கள்.அதிகாரி பிரசாந்தையும் கைது செய்தார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web