ரூ.47,800 கோடிக்கு நலதிட்டங்கள்... இன்று அஸ்ஸாம் செல்கிறார் பிரதமர் மோடி!
இன்று அசாம் மாநிலத்திற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழகத்தைப் போல அசாம் மாநிலத்திலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நி லையில், இன்றும், நாளையும் பிரதமர் மோடி அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மொத்தம் ரூ.47,800 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இந்த சுற்றுப்பயணத்தின் போது தொடங்கி வைக்கிறார்.

அசாம் மாநிலத்தில் போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதன்படி ரயில் பெட்டி பழுதுபார்க்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மேலும் மாநிலத்தில் 6 புதிய பாலங்கள் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

இதனுடன் அசாம் மாநில மக்களுக்கு வசதியாக 3 புதிய ரயில் சேவைகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டங்கள் மாநிலத்தின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
