பெண் குழந்தைகளுக்கு ரூ50000 உதவித்தொகை !! அதிரடி அறிவிப்பு!!

 
பெண் குழந்தை

தமிழகத்தில்  பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்  முதலமைச்சர் பெண் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் மூலம்  பெண் சிசுக் கொலையைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பையும்  உறுதி செய்கிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண் குழந்தை இருக்கும்  குடும்பங்களில்  அந்த பெண் குழந்தையின் பெயரில் ரூ.50,000 டெபாசிட் செய்யப்படும்.

பெண் குழந்தை

ஒரு குடும்பத்தில் 2  பெண் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில்  ஒவ்வொரு குழந்தைக்கும் தலா  ரூ.25, 000, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து சேமிப்பு பத்திரங்களாக  வழங்கப்படும். இந்த சேமிப்பு பத்திரம் அந்த குழந்தைக்கு  18 வயது நிறைவடைந்த பிறகு அதே நேரத்தில் குறைந்தது 10ம் வகுப்பு வரை முடித்தவர்களுக்கு  மட்டுமே வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இத்திட்டம் குறித்து  திருச்சி மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்தும், முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்காமல் உள்ளவர்களை உடனடியாக , மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழக அரசு
விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட சேமிப்பு பத்திரத்துடன்,  10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச்சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ   போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.  இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் நேரில் வந்து விசாரித்து தெரிந்து கொள்ளலாம். அல்லது  0431- 2413796 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web