நெல்லையில் வீடு, வீடாக ரூ6000/- டோக்கன் விநியோகம்...!

 
டோக்கன்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லையில் முதல்வர்  ஸ்டாலின் மற்றும் பல அமைச்சர்கள் நேரில் களஆய்வு மேற்கொண்டார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.  இது குறித்து முதல்வர் ஸ்டாலின்  நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.  
இந்நிலையில்  நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி ரூ.6000க்கு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி  நெல்லை, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் வட்டங்களில் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது

தூத்துக்குடி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் மிக்ஜாம் புயல் உருவானது இதன் காரணமாக சென்னை உட்பட 4 வட மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. அதே போல் குமரிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருநெல்வேலி உட்பட 4  தென் மாவட்டங்களில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கும் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  வரலாறு காணாத மழை பெய்தது.   தன்னார்வலர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை, அரசு அதிகாரிகள் உட்பட பலர் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி

மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், படகு மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு  ஹெலிகாப்டர் மூலம் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சீராக்கும் வகையில்   7 ஹெலிகாப்டர்கள் மற்றும் 2 சிறியரக விமானங்கள் மூலம் நேற்று காலை 06 மணி முதல் தொடர்ந்து 16 முறை  நிவாரண பொருட்கள்  குடிநீர்,  பிரட், பால் பவுடர் பிஸ்கட் மற்ற சில பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.    தூத்துக்குடியை பொறுத்தவரை இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியவே இல்லை. தொடர் மழை காரணமாக  நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web